ஒடிசாவில் இருந்து சேலத்துக்கு 86 டன் ஆக்சிஜன் ரெயிலில் வந்தது

ஒடிசாவில் இருந்து சேலத்துக்கு சிறப்பு ரெயிலில் நேற்று 86 டன் ஆக்சிஜன் வந்தது.

Update: 2021-06-11 22:31 GMT
சூரமங்கலம்:
ஒடிசாவில் இருந்து சேலத்துக்கு சிறப்பு ரெயிலில் நேற்று 86 டன் ஆக்சிஜன் வந்தது.
ஆக்சிஜன் தேவை
சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்க மூச்சு திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் தேவைப்பட்டது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கிடைக்காமல் ஏராளமானவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இதற்கிடையே சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1000 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது ஆக்சிஜன் வசதி தேவைபடுவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் நேற்று காலை சேலத்துக்கு ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது.
அனுப்பி வைக்கப்படும்
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
ஒடிசா மாநிலத்தில் இருந்து 4 கன்டெய்னர்களில் 86.22 டன் ஆக்சிஜன் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சேலம் சத்திரம் மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. தமிழகத்துக்கு 61-வது ஆக்சிஜன் சிறப்பு ரெயில் இன்று (நேற்று) வந்தது. இந்த ஆக்சிஜன் தேவையான அளவு சேலம் மாவட்டத்துக்கு எடுத்துக் கொண்டு மீதமுள்ள ஆக்சிஜனை அருகில் உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும் செய்திகள்