லாரியில் விலை உயர்ந்த கற்கள் கடத்திய டிரைவர் கைது
லாரியில் விலை உயர்ந்த கற்கள் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார
கரூர்
கரூரில் இருந்து லாரியில், விலை உயர்ந்த வெள்ளை கற்கள்(குவாட்ஸ் கற்கள்) கடத்தி செல்லப்படுவதாக கனிம வளத்துறை அதிகாரி பாலசுப்பிரமணியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வெங்கல் பட்டி அருகே வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் அதில் குவாட்ஸ் கற்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த லாரியின் டிரைவர் கொத்தன் பாலத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 37) என்பவரையும், லாரியையும் தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.