கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம், மளிகை பொருட்கள் பெற டோக்கன் வினியோகம்

கொரோனா நிவாரணம் மற்றும் 14 மளிைக பொருட்கள் அடங்கிய தொகுப்பு பெற டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது;

Update: 2021-06-11 20:19 GMT
கரூர்
 தமிழகத்தில் அதிகரித்த கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கூலி வேலைக்கு சென்று வந்த தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  ஊரடங்கால் வேலையிழந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிடும் பொருட்டு தமிழக அரசு ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்தது. முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.தற்போது வருகிற 15-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) 2-வது தவணையான ரூ.2 ஆயிரத்துடன் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்படுகிறது. இதற்காக வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் அதற்கான டோக்கன் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப்பணி வருகிற 14-ந் தேதி வரை நடைபெறும் என்றும், 15-ந் தேதி முதல் நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள்  வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்