பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் பகுதியில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-06-11 20:11 GMT
கும்பகோணம்;
கும்பகோணம் பகுதியில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கும்பகோணம்
கும்பகோணத்தில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தஞ்சை வடக்கு மாவட்ட விவசாயப் பிரிவு மற்றும் கும்பகோணம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். 
நகர காங்கிரஸ் தலைவர் மிர்சாவூதீன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தில்நாதன், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் தாராசுரம் சத்யா, வட்டார விவசாய பிரிவு தலைவர் கோபால், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஹிமாயூன் கபீர்,  மற்றும் பலர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
பாபநாசம்
பாபநாசம் நகர காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பாலத்துறை பெட்ரோல் பங்க் முன்பு நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பிற்பட்டோர் நல பிரிவு மாநில பொது செயலாளர் பூபதி ராஜா தலைமை தாங்கினார்.. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாபநாசம் நகர தலைவர் சபாபதி, சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வினோத், பாபநாசம் நகர இளைஞரணி தலைவர் பாலாஜி, தொழில் சங்க தலைவர் சித்தார்த்தன், இளைஞரணி செயலாளர் மணி மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மெலட்டூர்
மெலட்டூர் அருகே உள்ள இரும்புத்தலை பெட்ரோல் பங்க் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் பக்கிரிசாமி வாண்டையார் தலைமை தாங்கினார். அம்மாப்பேட்டை வட்டார தலைவர்கள் கண்ணன், கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரும்புதலை ஊராட்சி தலைவர் பாலாஜி, மாவட்ட பொதுசெயலாளர் திருநாவுக்கரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  முடிவில் நகர தலைவர் முபாரக் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்