பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தென்காசியில் காங்கிரசார் போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தென்காசி மாவட்டத்தில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
தென்காசி:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தென்காசி மாவட்டத்தில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
தென்காசி
தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று காலை மொபட் ஒன்றுக்கு பாடை கட்டி நூதன போராட்டம் நடைபெற்றது. தென்காசி புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கின் முன்பு நடந்த இந்த போராட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள், மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
செங்கோட்டையில் வாஞ்சிநாதன் சிலை அருகில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நகர காங்கிரஸ் தலைவா் ராமா் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனா்.
சிவகிரி- திருவேங்கடம்
சிவகிரியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி தலைவர் திருஞானம் தலைமையிலும், திருவேங்கடம் என்.ஜி.ஓ. காலனி அருகில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு குருவிகுளம் வட்டார காங்கிரஸ் தலைவர் தீப்பொறி ராமர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் அழகுதுரை, தேசிய செயலாளர் மாரி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
புளியங்குடியில் நகர காங்கிரஸ் தலைவர் பால்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.