கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதை தடுக்க ஆளில்லா குட்டிவிமானம் மூலம் கண்காணிப்பு

கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதை தடுக்க ஆளில்லா குட்டிவிமானம் மூலம் கண்காணிப்பு

Update: 2021-06-11 19:17 GMT
காரமடை

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் டாஸ்மாக் மூடப்பட்டு உள்ளதால், பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. 

இதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

 இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரராஜன், இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், பாலமுருகன் ஆகியோர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், ராஜபிரபு, சின்னதாமன் உள்பட 20 பேர் கொண்ட குழுவினர் காரமடை அருகே உள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

ஏழுசுழி, கட்டாஞ்சி மலை, வெள்ளியங்காடு, தோலம்பாளையம், மாந்தரைக்காடு உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கள்ளாச்சாராயம் காய்ச்சப்படுகிறதா என ஆளில்லா குட்டிவிமானம் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.  

இது குறித்து போலீசார் கூறும்போது, கள்ளாச்சாராயம் காய்ச்சப்படுவதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தால் உடனடியாக தெரிவிக்கலாம் என்றனர்.


மேலும் செய்திகள்