கொரோனாவுக்கு 4 பேர் பலி

கொரோனாவுக்கு 4 பேர் பலியாகினர்.

Update: 2021-06-11 17:49 GMT
ராமநாதபுரம், 
 ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 18 ஆயிரத்து 565 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து ஆயிரத்து 190 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 16 ஆயிரத்து 914 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது ஆயிரத்து 351 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மொத்தம் 300 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.ந்தநிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 4 பெண்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 190 பேர் குணமடைந்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்