குடியாத்தம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து பசுமாடு பலி

குடியாத்தம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து பசுமாடு பலி;

Update: 2021-06-11 17:36 GMT
குடியாத்தம்

குடியாத்தம் அடுத்த ஒலக்காசி கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 62). இவர் தனக்கு சொந்தமான பசுமாட்டை அருகில் உள்ள வயல் வெளிகளுக்கு மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலையில் கஸ்தூரி தனது பசுமாட்டை வேப்பூர் ஆற்றோரம் உள்ள ரகு என்பவரது நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். 

அப்போது அந்த நிலத்தில் உள்ள தென்னை மரத்தின் மட்டைகள் மின் கம்பிகள் மீது விழுந்துள்ளது. இதனால் ஒரு மின் கம்பி அறுந்து வயலில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு மீது விழுந்துள்ளது.
இதில் பசுமாடு மின்சாரம் தாக்கி துடிதுடித்து பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்