மணல் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல்
மணல் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.;
சாயல்குடி,
கடலாடி மலட்டாறு ஆற்றுப்படுகையில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத் தலின்பேரில் சாயல்குடி தலைமை காவலர் செந்தூர் பாண்டியன், போலீசார் வேல்முருகன், துரைக்கண்ணு ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கூரான்கோட்டை ஆற்றுப்படுகையில் இருந்து எஸ்.கீரந்தை பனங்காட்டு பகுதியில் டிராக்டரில் மணல் அள்ளி கொண்டு வந்தவர்கள் போலீசாரை கண்டவுடன் டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து சாயல்குடி சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், கட்டாலங்குளம் கிராமத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் தண்டாயுதம், நோம்பக்குளம் கிராமத்தை சேர்ந்த வினித் முருகன், செல்வம் எஸ். கீரந்தை, கிராமத்தை சேர்ந்த குணா பாலாஜி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து டிராக்டரை் பறிமுதல் செய்தனர்.