காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்களை கலெக்டர் செந்தில்ராஜ அறிவித்துள்ளார்

காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்களை கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்

Update: 2021-06-11 16:45 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காய்ச்சல் சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுரகுடிநீர் வினியோகம் மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று காலையில் மேலதட்டபாறை, தெற்கு சிலுக்கன்பட்டி, பி.எஸ்.பி. நகர் கோரம்பள்ளம், நாட்டார்குளம், விட்டிலாபுரம், காசிலிங்கபுரம், முருகன்புரம், செய்துங்கநல்லூர், சந்தையடியூர், நளன்குடி, நளராஜபுரம், சுந்தரபாண்டியபுரம், முக்காணி தெற்கு, முக்காணி வடக்கு, முக்காணி ரவுண்டானா, மன்னராயன்தட்டு, கொம்புகாரன்பொட்டல், கண்ணாடிவிளை, சுல்தான்புரம், சிவலூர், கொட்டாவிளை, முருகன் காலனி, தேரிகுடியிருப்பு, காயாமொழி ராமநாதபுரம், தெற்கு தெரு, காயல்பட்டிணம் நகராட்சி ஹாஜி அப்பா தைக்கா தெரு, அழகாபுரி தெற்கு தெரு, சீதக்காதி நகர், பிலோமி நகர், அடைக்கலாபுரம், ராணிமகாராஜபுரம், தெற்கு கோட்டூர், ராஜபதி, நாலுமாவடி, ஓடக்கரை, புன்னக்காயல், வரண்டிவேல், வடக்கு ஆத்தூர், சுகநகரம், சிவன்குடியிருப்பு, பிச்சிவிளை, பெருமாள்புரம், இந்திராகாலனி, சமத்துவபுரம், புதுகாலனி, ராஜாபுதுக்குடி, காலம்பட்டி, வானரமுட்டி, சன்னதுபுதுக்குடி, சிதம்பரபட்டி, ஆறுமுகநகர், மீரான்பாளையம், கீழ விளாத்திகுளம், கே.சுப்பிரமணியபுரம், பத்திரகாளியம்மன் கோவில் தெரு, சோழமலையன்பட்டி, ராமநாதபுரம், மேலபாண்டியாபுரம், மருதன்வாழ்வு, முறம்பன், ரெட்டியாபட்டி, தவசிலிங்கபுரம், சென்ட்ராயபுரம், கவுண்டன்பட்டி, சக்கனாபுரம், குஞ்சையாபுரம் ஆகிய பகுதிகளில் முகாம் நடக்கிறது.
தட்டப்பாறை
மாலையில் மேலதட்டபாறை, தெற்கு சிலுக்கன்பட்டி, பி.எஸ்.பி. நகர் கோரம்பள்ளம், நாட்டார்குளம், விட்டிலாபுரம், காசிலிங்கபுரம், முருகன்புரம், செய்துங்கநல்லூர், சந்தையடியூர், நளன்குடி, நளராஜபுரம், சுந்தரபாண்டியபுரம், முக்காணி தெற்கு, முக்காணி வடக்கு முக்காணி ரவுண்டானா, மன்னராயன்தட்டு, கொம்புகாரன்பொட்டல், கண்ணாடிவிளை, சுல்தான்புரம், சிவலூர், கொட்டாவிளை, முருகன் காலனி, தேரிகுடியிருப்பு, காயாமொழி ராமநாதபுரம், தெற்கு தெரு, காயல்பட்டிணம் நகராட்சி ஹாஜி அப்பா தைக்கா தெரு, அழகாபுரி தெற்கு தெரு, சீதக்காதி நகர், பிலோமி நகர், அடைக்கலாபுரம், ராணிமகாராஜபுரம், தெற்கு கோட்டூர், ராஜபதி, நாலுமாவடி, ஓடக்கரை, புன்னக்காயல், வரண்டிவேல், வடக்கு ஆத்தூர், சுகநகரம், சிவன்குடியிருப்பு, பிச்சிவிளை, பெருமாள்புரம், இந்திராகாலனி, சமத்துவபுரம், புதுகாலனி, பாளையாபுரம், ஆவுடையம்மாள்புரம், சி.ஆர்.காலனி, விளாத்திகுளம் போலீஸ் லைன், மீனாட்சிபுரம், ராமச்சந்திரபுரம், சண்முகபுரம், அய்யப்பாபுரம், குலசேகரநல்லூர், பள்ளிவாசல் பட்டி, குமரலிங்கபுரம், டி.சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளிலும் முகாம் நடக்கிறது.
எனவே பொதுமக்கள் அனைவரும் முகாம்களில் தவறாமல் கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்