திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ரேஷன்கடைகள் மூலம் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ரேஷன்கடைகள் மூலம் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ரேஷன்கடைகள் மூலம் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
14 வகையான மளிகை பொருட்கள்
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும், அத்தியாவசிய பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்படும் எனவும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
ஏற்கனவே முதல் கட்டமாக தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 2-வது தவணையான ரூ.2 ஆயிரம் வழங்கவும், 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இந்த மளிகை பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
ஏற்பாடுகள் தயார்
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக சர்க்கரை, கோதுமை மாவு, உப்பு, ரவை, உளுத்தம் பருப்பு, புளி, கடலை பருப்பு, டீ தூள் உள்பட 14 வகையான பொருட்கள் வழங்குவதற்காக சென்னையில் இருந்து நுகர்பொருள் வாணிப கிடங்குகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்குகளுக்கு லாரிகள் மூலம் படிப்படியாக பொருட்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறு வருகிற பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன்கார்டுதாரர்கள் அடிப்படையில் இவை அனுப்பி வைக்கப்படுகின்றன. வருகிற 15-ந் தேதி முதல் இவை வினியோகிக்கப்பட இருக்கின்றன. விரைவில் மாவட்டத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் வந்துவிடும். அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.