புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த 7 பேர் கைது

புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-06-10 21:02 GMT
திருவெறும்பூர்,
புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் இருந்து காரில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் தலைமையிலான போலீசார் காட்டூர் பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, காரில் 450 மதுபாட்டில்கள் இருந்தன. விசாரணையில், காரில் வந்தவர்கள் காட்டூர் வின் நகரை சேர்ந்த மதன்ராஜ், அண்ணா நகரை சேர்ந்த விக்கி, காட்டூர் ராஜவீதியை சேர்ந்த சுகன், எழில் நகரை சேர்ந்த அருண்குமார் என்பதும், அவர்கள் புதுச்சேரியில் இருந்து அவற்றை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார், 450 மதுபாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்தனர். இதுபோல் லால்குடி பகுதியில் வாகன சோதனையில் புதுச்சேரியில் இருந்து காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த நகர் கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார் (30), விவேக் (32), சிறுமருதூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன்ராஜ் (25) ஆகியோரை லால்குடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 53 மதுபாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்