பெங்களூருவில் இருந்து 718 மதுபாக்கெட்டுகளை காரில் கடத்தியவர் கைது

பெங்களூருவில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 718 மதுபாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-06-08 21:33 GMT
சேலம்:
சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் நேற்று அதிகாலையில் கருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார், ஒரு காரில், பெங்களூருவில் இருந்து சேலம் கருப்பூர் சுங்கச்சாவடி வழியாக கள்ளக்குறிச்சி நீலமங்களத்திற்கு மது பாக்கெட்டுகள் கடத்தி வரப்பட்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த காரில், அட்டை பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்த 718 மதுபாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.2½ லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
மதுபாக்கெட்டுகளை காரில் கடத்தி வந்தது, பெங்களூரு சுபாஷ் சந்திர போஸ் ரோடு கே.வி.பி. நகர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் விவேக் (வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த கருப்பூர் போலீசார், மதுபாக்கெட்டுகளுடன் காரை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்