3 வீடுகளில் பணம் - நகை திருட்டு

சாத்தூரில் ஒரேநாளில் 3 வீடுகளில் பணம் மற்றும் நகையை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

Update: 2021-06-08 20:53 GMT
சாத்தூர்
சாத்தூரில் ஒரேநாளில் 3 வீடுகளில் பணம் மற்றும் நகையை மர்மநபர்கள் திருடி சென்றனர். 
நகை திருட்டு 
சாத்தூர் முருகன் கோவில் தெருவில் உள்ள வக்கீல் சந்து பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன் (வயது 35). டிரைவர். இவர் வேனில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி சென்றுள்ளார். பாண்டியன் மனைவி சங்கீதா (30). இவர் தீப்பெட்டி அலுவலகத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வேலை முடித்து வீட்டிற்கு திரும்பிய சங்கீதா வீடு திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 4,500-ம், 1½ கிராம் நகையும் திருட்டு போனது தெரியவந்தது.
வலைவீச்சு 
இதைபோல் அதேபகுதியில் உள்ள விஜயலட்சுமி (29) என்பவரது வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த ரூ.400-யை மர்மநபர்கள் திருடி சென்றது ெதரிய வந்தது. 
அதேபோல கான்வென்ட் தெற்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி (37) என்பவர் வீட்டிலும் பீரோவை உடைத்து ரூ.3500-யை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. 
இதுகுறித்து தகவலறிந்து சாத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் சையது இப்ராஹிம் ஆகியோர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
 இதையடுத்து தடயவியல் நிபுணர்களும் வந்து கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்