ஊரடங்கு விதிமீறல்:இதுவரை ரூ.75 லட்சம் அபராதம்

ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

Update: 2021-06-08 20:52 GMT
கரூர்
மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
கரூர் மாவட்டத்தில் இதுவரை 19,589 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 16,476 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 2,834 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் 665 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 437 பேரும், கொரோனா பராமரிப்பு மையத்தில் 167 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,565 பேர் மருத்துவ உதவிகளுடன் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.  தற்போது வரை 1 லட்சத்து 13 ஆயிரத்து 382 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதுமான அளவில் ஆக்சிஜன் இருப்பில் உள்ளது. கரூர் மாவட்டத்தில் ஊரடங்கின் போது விதிமீறலில் ஈடுபட்ட வணிக நிறுவனங்கள் பொதுமக்கள் மீது தற்போது வரை ரூ.74 லட்சத்து 96 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 676 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்