சாராயம் கடத்திய 2 பட்டதாரி வாலிபர்கள் கைது

வேப்பந்தட்டை அருகே சாராயம் கடத்திய 2 பட்டதாரி வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-08 20:45 GMT
வேப்பந்தட்டை:

சாராயம் கடத்தல்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பில்லங்குளம் வழியாக பக்கத்து மாவட்டங்களில் இருந்து சாராயம் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, அபுபக்கர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பில்லங்குளம் வெள்ளாற்றங்கரை வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து, சோதனை செய்தனர். இதில் சுமார் 25 லிட்டர் சாராயத்தை பாக்கெட்டுகளில் கடத்தி வந்தது தெரியவந்தது.
2 பேர் கைது
விசாரணையில், அவர்கள் திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா நெடுங்கூரை சேர்ந்த அரவிந்த்(வயது 24), கமலேஷ்(22) என்பதும், இருவரும் பட்டதாரிகள் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்