தூய்மை பணியாளர்களுக்கு அரிசி; மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
தென்காசியில் தூய்மை பணியாளர்களுக்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. இலவசமாக அரிசி வழங்கினார்.;
தென்காசி, ஜூன்:
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் பூலாங்குளம் கிராமத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு இவற்றை வழங்கினார். இதில் அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வி.கே.கணபதி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.