சுரண்டையில் ஊரடங்கை மீறிய 120 பேருக்கு கொரோனா பரிசோதனை

சுரண்டையில் ஊரடங்கை மீறிய 120 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

Update: 2021-06-08 20:06 GMT
சுரண்டை, ஜூன்:
சுரண்டையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சங்கரநாராயணன், வீரகேரளம்புதூர் தாசில்தார் வெங்கடேஷ், சுரண்டை பேரூராட்சி நிர்வாக அதிகாரி வெங்கட கோபு ஆகியோர் தலைமையில் சுரண்டை அண்ணாசிலை அருகில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் அதிகமான நபர்கள் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதை பார்த்து அவர்களுக்கு அதிரடியாக கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்தனர். அதில் அப்பகுதியில் வாகனங்களில் சுற்றிய 120 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் மாரியப்பன், சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமலை, சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திர குமார், கிருஷ்ணமூர்த்தி, சுகாதார மேற்பார்வையாளர்கள் ஜெயபிரகாஷ், ராமர், அலுவலக பணியாளர்கள் முருகன், காளிராஜ் மற்றும் சுகாதாரத் துறையினர் பங்கேற்றனர்.
இதேபோல் செங்கோட்டை பஸ்நிலையம் தேவையின்றி சுற்றித்திரிந்த 25 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்