பஞ்சாயத்து பெண் ஊழியரிடம் செல்போன் பறிப்பு; மேலும் ஒருவர் கைது
திசையன்விளை அருகே பஞ்சாயத்து ஊழியரிடம் செல்போன் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை, ஜூன்:
திசையன்விளை அருகே தரகன் காட்டை சேர்ந்தவர் அழகுராஜா. இவருடைய மனைவி பாலசரஸ்வதி (வயது 32). இவர் திசையன்விளை நகரப்பஞ்சாயத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று திசையன்விளை செல்வ மருதூர் பவுண்டு ெதரு அருகில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், பாலசரஸ்வதியின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து, இதுதொடர்பாக திசையன்விளை தங்கம் திருமண மண்டப தெருவை சேர்ந்த பட்டதாரி வாலிபர் சண்முகசுந்தரம் (வயது 26) என்பவரை ஏற்கனவே கைது செய்திருந்தனர். நேற்று இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த திசையன்விளை- இட்டமொழி ரோடு பகுதியை சேர்ந்த டேனியல் செல்வன் (19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.