சலூன் கடை தீ வைத்து எரிப்பு

பொள்ளாச்சி அருகே சலூன் கடைக்கு தீ வைத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-06-08 19:12 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே சலூன் கடைக்கு தீ வைத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சலூன் கடை

பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்தவர் சபரிவேல் (வயது 21). இவர் வால்பாறை ரோடு ஆழியாறில் கடந்த 3 மாதமாக சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். 

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருப்பதால் கடையை திறக்கவில்லை. 

இந்த நிலையில்  கடை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். மேலும் ஆழியாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீ வைத்து எரிப்பு 

இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் கடையில் பிடித்த தீ அணைக்கப்பட்டது. 

இதில் டி.வி., ஹோம் தியேட்டர், கண்ணாடி, டேபிள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மேற்கொண்டனர். விசாரணையில் யாரோ மர்ம நபர்கள் மண்ணெண்யை ஊற்றி சலூன் கடைக்கு தீ வைத்தது தெரியவந்தது.

 இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைக்கு தீ வைத்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். 

போலீசார் விசாரணை

இதற்கிடையில் தீப்பிடித்து எரிந்த அந்த கடைக்கு அருகில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் புகைப்படம் உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் பரவியது. 

இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா மற்றும் போலீசார் விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த 3-ந் தேதி கருணாநிதி பிறந்த நாள் அன்று அவரது உருவபடத்தை வைத்து நிகழ்ச்சி நடத்திவிட்டு அங்கேயே விட்டுச்சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் சம்பந்தப் பட்ட நபர்களை வரவழைத்து கருணாநிதியின் புகைப்படத்தை எடுத்து செல்ல அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்