ஆடு திருடியவர் கைது

ஆடு திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-08 19:10 GMT
பேரையூர், ஜூன்.
திருமங்கலம் தாலுகா தங்களாச்சேரியை சேர்ந்தவர் போஸ் (வயது 37). இவர் தனது ஆடுகளை அங்குள்ள கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கொட்டகையில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள சினை ஆடு திருடு போயிருந்தது. இதுகுறித்து போஸ் நாகையாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து கப்பலூர் அருகே உள்ள தர்மத்துபட்டியை சேர்ந்த கல்யாணி குமார் (வயது 32) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்