10 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

10 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-08 19:07 GMT
நாகமலைபுதுக்கோட்டை,
மதுரை நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது நான்குவழிச் சாலை அருகே ஒரு டிராக்டர் நின்று கொண்டிருந்தது. அந்த டிராக்டரின் பின்புறம் வெள்ளை நிற சாக்கு பை இருப்பதைக்கண்டு சந்தேகமடைந்த போலீசார் அதை சோதனை செய்தனர். இதில் அந்த பையில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. டிராக்டரை ஓட்டி வந்த நபரிடம் போலீசார் விசாரித்ததில் அவர் உசிலம்பட்டி தாலுகா மானூத்தைச் சேர்ந்த கோட்டை (வயது 47), என்பதும், அச்சம்பத்து லாலா சத்திரத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்பவருக்கு கஞ்சாவை கொண்டு சென்றதும் தெரிய வந்தது. போலீசாரைக் கண்டதும் தங்கப்பாண்டி தனது மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து கோட்டையை கைது செய்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார் அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா, டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய தங்கப்பாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்