சாராயம் விற்ற 2 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

அவினாசி அருகே சாராயம் விற்ற 2 பேர் கைதுசெய்யப்பட்டனர்.;

Update: 2021-06-08 19:01 GMT
அவினாசி
அவினாசி அருகே சாராயம் விற்ற 2 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
சாராயம் விற்பனை
அவினாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது. எனவே அவினாசி மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். 
நேற்று அவினாசி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் சர்வேஸ்வரன் மற்றும் போலீசார் அவினாசி, மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இச்சிப்பட்டி பெத்தம்பூச்சிபாளையம் அருகே சாராயம் விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. 
2 பேர் கைது
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது இச்சிப்பட்டி அய்யன் கோவில் வீதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரனையில் அவர்கள் இச்சிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியம் (வயது65), இச்சிப்பட்டி செந்தோட்டத்தை சேர்ந்த முருகன் (29) என்பதும், அவர்கள் சட்டவிரோதமாக 1 லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 பிளாஸ்டிக் பாட்டில்களில் சாராயம் விற்பனைக்கு வைத்திருந்து தெரியவந்தது.
 எனவே அவர்கள் இருவர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்த ஒரு கார், ஒரு மொபட் மற்றும் ரூ 1300 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்