மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா; ஒரே நாளில் 138 பேருக்கு தொற்று

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் 138 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. 70 வயதான முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார்.

Update: 2021-06-08 18:29 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் 138 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. 70 வயதான முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார்.

மீண்டும் அதிகரிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் விளைவாக கொரோனா பாதிப்பு படிப்படியாக மாவட்டத்தில் குறைய தொடங்கியது. கடந்த 4-ந்தேதி 187 பேருக்கு தொற்று, 5-ந்தேதி 146 பேருக்கு தொற்று, 6-ந்தேதி 125 பேருக்கு தொற்று, 7-ந்தேதி 115 பேருக்கு தொற்று என படிப்படியாக குறைந்தது.
 இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்தது. இதன் காரணமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

முதியவர் பலி

மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 1,596 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 208 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
இதே போல் கொரோனா தொற்று காரணமாக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயதுள்ள முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மேலும் செய்திகள்