வீட்டின் முன்பு பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்
வீட்டின் முன்பு பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்
கமுதி
கமுதி சின்னம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவில், பக்தர்கள் வீட்டின் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
கமுதி சத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட சின்னம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிறது. தற்போது ஊரடங்கு என்பதால், பொதுமக்கள் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. உறவின்முறை நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனர். இந்தநிலையில் நேற்று பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைக்க அனுமதி வழங்கப்படாததால், அவரவர் வீட்டின் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர்.