சாலை வரி செலுத்தாமல் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ்சுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

சாலை வரி செலுத்தாமல் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ்சுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-06-08 18:14 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் தடங்கம் மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஒரு தனியார் பஸ்சை நிறுத்தி ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டன. அப்போது புதுச்சேரி மாநில பதிவு எண் கொண்ட அந்த பஸ் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அந்த பஸ்சில் கோவையில் இருந்து பீகார் மாநிலத்திற்கு தொழிலாளர்களை ஏற்றி செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து சாலை வரியை செலுத்தாமல் பஸ்சை இயக்கியதற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தனியார் பஸ்சுக்கு செலுத்தவேண்டிய சாலை வரி ரூ.48 ஆயிரத்து 610- ஐ வசூலிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்