ஓசூர் அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ஓசூர் அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-08 17:40 GMT
ஓசூர்,

தேன்கனிக்கோட்டை தாலுகா கெத்தனஅள்ளி பக்கமுள்ள துளுவபெட்டாவை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 26). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், பசவராஜ் தனது மனைவிக்கு தெரியாமல் மோட்டார் சைக்கிளை விற்றார். இதுகுறித்து அவரது மனைவி கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பசவராஜ், ஓசூர் சிப்காட் அருகே சின்னஎலசகிரி பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்