கூடலூரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.

கூடலூரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2021-06-08 17:38 GMT
கூடலூர்,

கூடலூர், பந்தலூர் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் சப்- கலெக்டர் (தேர்தல்) குணசேகரன் ஆய்வு செய்தார். அப்போது கூடலூர் அருகே பாண்டியாறு அரசு தோட்ட தேயிலை தோட்ட குடோன் பகுதியில் இரும்பு தடுப்புகள் கொண்டு அடைத்துள்ளதை பார்வையிட்டார். 

பின்னர் நாடுகாணி தபால் அலுவலகம் பகுதி, தேவாலா அட்டி, நெல்லியாளம், பந்தலூர் உள்ளிட்ட பல இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பகுதியில் உள்ள மக்கள் எக்காரணம் கொண்டும் வெளியே நடமாடக் கூடாது.

 மேலும் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதேபோல் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்படுகிறதா என விசாரணை நடத்தினார். 

மேலும் பொதுமக்களுக்கு தடையின்றி பொருட்கள் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் தனி தாசில்தார் சங்கர் கணேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜாபர் ஷரீப், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்