வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு

Update: 2021-06-08 17:27 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2017-2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக்கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

பதிவை புதுப்பிக்க தவறிய பதுவிதாரர்கள்  27.8.2021-க்குள் இணையதளம் வாயிலாக தங்களது பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையதளம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் திருப்பத்தூர் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்