ராணிப்பேட்டை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா பதவியேற்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரவுடியிசம் செய்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என புதிதாக பதவியேற்ற போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தெரிவித்தார்.;

Update: 2021-06-08 17:16 GMT
ராணிப்பேட்டை

பதவியேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் பணிமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த ஓம்பிரகாஷ் மீனா ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.‌ அவர் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொறுப்பேற்று‌ கொண்டார்.

அவருக்கு போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பூரணி (ராணிப்பேட்டை), மனோகரன் (அரக்கோணம்) மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு  ஓம்பிரகாஷ் மீனா ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். தஞ்சாவூரில் பயிற்சியை முடித்து, மதுரை மாவட்டத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாகவும், ராமநாதபுரம், நெல்லை, நாகை மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாகவும் பணிபுரிந்துள்ளார்.

ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது :-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்siசினை, குறிப்பாக பெண்கள், குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. பொதுமக்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற அரசின் விதிமுறைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அரக்கோணம் பகுதியில் ரவுடயிசம் அதிகமாக இருப்பதாக தெரிவித்து உள்ளார்கள். ரவுடயிசத்தில் ஈடுபடுவர்கள்‌ மீது அவர்களின் பழைய வழக்குகளை வைத்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்