குடிநீர் பாட்டில்களில் சாராயத்தை நிரப்பி விற்பனை செய்தவர் கைது

கண்டாச்சிபுரத்தில் குடிநீர் பாட்டில்களில் சாராயத்தை நிரப்பி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-06-08 16:59 GMT
திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் பகுதியில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கண்டாச்சிபுரம் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் மாறுவேடத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கையில் பையுடன் வந்து கொண்டிருந்த ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கண்டத்தை சேர்ந்த பரமசிவம் மகன் சங்கர் (வயது 39) என்பது தெரிந்தது. மேலும் அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில்  குடிநீர் பாட்டில்களில் சாராயத்தை நிரப்பி வைத்திருந்தை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று துருவி, துருவி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஆர்டரின் பேரில் குடிநீர்பாட்டில்களில் சாராயத்தை நிரப்பி, அதனை வீடுகளுக்கு நேரில் சென்று குடிபிரியர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது.

ஊரடங்கு

 இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.  ஊரடங்கு காரணமாக தற்போது டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், இதை பயன்படுத்தி நூதனமுறையில் குடிநீர் பாட்டில்களில் சாராயத்தை நிரப்பி விற்பனை செய்த சம்பவம் கண்டாச்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்