திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று காலை திண்டிவனம்-செஞ்சி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் தலா 220 கிலோ எடை கொண்ட 5 மூட்டைகளில் மொத்தம் 1,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார், ஓட்டோவை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திண்டிவனம் ரோஷணை கெங்கை அம்மன் கோவில் தெருவை் சேர்ந்த ஏழுமலை மகன் முருகன் (வயது 43) என்பதும், திண்டிவனத்தில் இருந்து செஞ்சிக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திச் சென்றபோது சிக்கியதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் அதனை கடத்தப்பட்ட ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் செய்து, தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்த ரேஷன் அரிசி மூட்டைகள் விழுப்புரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.