மயிலம்,
மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு முருகா நகர் குடியிருப்பு பகுதியில் அரிய வகை ஆந்தை ஒன்று அங்கும் இங்குமாக பறந்து கொண்டிருந்தது. அந்த ஆந்தையை அப்பகுதியில் இருந்த காகங்கள் துரத்தி துரத்தி கொத்தின. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் காகங்களை விரட்டிவிட்டு, ஆந்தையை மீட்டு திண்டிவனம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். காகங்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஆந்தைக்கு சிகிச்சை அளித்து அருகே உள்ள வனப்பகுதியில் கொண்டு விடப்படும் என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.