வாகனம் மோதி பலியான பெண்

வாகனம் மோதி பலியான பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-06-08 16:20 GMT
கொட்டாம்பட்டி,ஜூன்
கொட்டாம்பட்டி அருகே திருச்சுனை விலக்கு நான்கு வழி சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நேற்று சாலையோரம் நடந்து சென்ற சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் மீது மதுரையில் திருச்சி நோக்கி சென்ற வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அந்தப் பெண் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப் பதிவு செய்து பலியான பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்