வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-06-08 15:51 GMT
மதுரை,ஜூன்.
மதுரை திடீர்நகர், மேலவாசல் குடிசை மாற்று வாரிய பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் ஜெபமணி (வயது 30). நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் இவர் மீது கஞ்சா விற்பனை, கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. எனவே இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த்சின்கா உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் ஜெபமணியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்