செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 837 பேர் பாதிப்பு 22 பேர் உயிரிழந்தனர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 837 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 22 பேர் உயிரிழந்தனர்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 837 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 209 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 736 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்தனர்.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,103 ஆக உயர்ந்தது. இதில் 6,370 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 306 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66 ஆயிரத்து 304 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 62 ஆயிரத்து 459 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 18 பேர் உயிரிழந்தனர்.
இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,060 ஆக உயர்ந்துள்ளது. 2 ஆயிரத்து 785 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.