ஈரோடு மாவட்டத்தில் குறையாத தொற்று பரவல்; வாலிபர் உள்பட 19 பேர் கொரோனாவுக்கு பலி- புதிதாக 1,646 பேருக்கு பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் வாலிபர் உள்பட 19 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும், புதிதாக 1,646 பேருக்கு தொற்று உறுதியானது.;

Update: 2021-06-07 22:37 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் வாலிபர் உள்பட 19 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும், புதிதாக 1,646 பேருக்கு தொற்று உறுதியானது.ஈரோடு மாவட்டத்தில் வாலிபர் உள்பட 19 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும், புதிதாக 1,646 பேருக்கு தொற்று உறுதியானது.
1,646 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவல் சற்று தணிந்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரிய நகரங்களில் தொற்று பரவல் வேகம் குறைந்து உள்ளது. மாநிலத்திலேயே முதலிடத்தில் உள்ள கோவையிலும் கடந்த சில நாட்களாக நோய் தொற்று படிப்படியாக குறைகிறது. ஆனால் ஈரோட்டில் தினமும் 1,600-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக மாநிலத்திலேயே 2-வது இடத்தை ஈரோடு பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் தொற்று குறைந்து வரும் சூழ்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் குறையாமல் இருப்பது மக்களிடையே தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் மாநில சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,646 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67 ஆயிரத்து 905 ஆக உயர்ந்தது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் சற்று உயர்ந்து உள்ளது. நேற்றைய தினம் 2 ஆயிரத்து 392 பேர் குணமடைந்தார்கள். இதுவரை 52 ஆயிரத்து 739பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். தற்போது 14 அயிரத்து 712 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர்.
25 வயது வாலிபர்
இதற்கிடையே கொரோனாவுக்கு மேலும் 19 பேர் பலியாகி உள்ளார்கள்.
இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 47 வயது ஆண், 64 வயது மூதாட்டி ஆகியோர் கடந்த மாதம் 25-ந் தேதியும், 60 வயது மூதாட்டி 26-ந் தேதியும், 67 வயது முதியவர் 27-ந் தேதியும், 54 வயது ஆண் 30-ந் தேதியும், 40 வயது ஆண், 50 வயது ஆண், 70 வயது முதியவர் ஆகியோர் 31-ந் தேதியும், 47 வயது ஆண்  கடந்த  1-ந் தேதியும், 53 வயது பெண், 70 வயது மூதாட்டி ஆகியோர் 2-ந் தேதியும், 69 வயது மூதாட்டி, 70 வயது மூதாட்டி, 72 வயது முதியவர் ஆகியோர் 3-ந் தேதியும், 25 வயது வாலிபர், 65     வயது    மூதாட்டி,  70 வயது முதியவர் ஆகியோர் 4-ந் தேதியும், 42 வயது ஆண், 68 வயது மூதாட்டி நேற்று முன்தினமும் பலியானார்கள். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 454 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்