பவானிசாகர் அருகே லாரி கவிழ்ந்தது; 2 டன் தக்காளி நாசம்
பவானிசாகர் அருகே லாரி கவிழ்ந்ததில் 2 டன் தக்காளி நாசம் அடைந்தது.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே லாரி கவிழ்ந்ததில் 2 டன் தக்காளி நாசம் அடைந்தது.
லாரி கவிழ்ந்தது
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தக்காளி பழங்கள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கோவையை நோக்கி சென்றுகொண்டு இருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் காளையார்கோவில் பகுதியை சேர்ந்த பாசில்ரயான் என்பவர் லாரியை ஓட்டினார். இந்த லாரி நேற்று காலை ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வழியாக தொட்டம்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது, ஒரு வளைவில் லாரி திரும்பியது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டோரம் இருந்த ஒரு வாழைத்தோட்டத்தில் கவிழ்ந்தது.
தக்காளி நாசம்
இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் பாசில்ரயான் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தில் லாரியில் இருந்த 2 டன் தக்காளி பழங்களும் நாசமடைந்தன.
இதுபற்றி தகவல் அறிந்ததும், பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டார்கள். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.