சேலத்தில் தொழிலாளி வீட்டுக்குள் புகுந்த 5 அடி நீள சாரைப்பாம்பு
சேலத்தில் தொழிலாளி வீட்டுக்குள் புகுந்த 5 அடி நீள சாரைப்பாம்பு பிடிபட்டது
சேலம்:
சேலம் கந்தம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 44). தொழிலாளி. இவரது வீட்டுக்குள் நேற்று மாலை ஒரு பாம்பு புகுந்தது. இதைப்பார்த்த வீட்டுக்குள் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர்.
பின்னர் இதுகுறித்து செல்லத்துரை சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டுக்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை அருகில் உள்ள காட்டுப்பகுதியில் விட்டனர்.