குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சித்தளி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் சின்னசாமி(வயது 65). விவசாயியான இவர் நேற்று வீட்டில் இருந்து பெரம்பலூர்- அரியலூர் மெயின் ரோட்டில் உள்ள தனது வயலுக்கு சைக்கிளில் சென்றார். மெயின் ரோட்டை கடந்தபோது பெரம்பலூர் நோக்கி வந்த மினி லாரி, சைக்கிள் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே சின்னசாமி பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சின்னசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி லாரி டிரைவர் திருச்சி முத்தரசநல்லூரை சேர்ந்த வைத்தீஸ்வரனை(24) கைது செய்து சிறையில் அடைத்தனர்.