கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 113 ஆக உயர்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 118 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
118 பேருக்கு தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 9,764 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 7,926 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவிற்கு பலியானோர் பட்டியலுடன் நுரையீரல் நிமோனியா தொற்றால் ஜூன் மாதத்தில் உயிரிழந்த 4 பேரின் எண்ணிக்கை சேர்க்கப்பட்டதால், மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி பெரம்பலூர் ஒன்றியத்தில் 44 பேர், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 23 பேர், வேப்பூர் ஒன்றியத்தில் 32 பேர், ஆலத்தூர் ஒன்றியத்தில் 19 பேர் என மொத்தம் 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
460 பேருக்கு சிகிச்சை
கொரோனா தொற்றுக்கு உள்ளான 1,725 பேரில் 1,265 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், வீடுகளில் தனிமைப்படுத்தியும் வைக்கப்பட்டுள்ளனர். 460 பேர் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சென்னை, கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.