மண் கடத்தியவர் கைது; பொக்லைன் எந்திரம் பறிமுதல்

மண் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2021-06-07 21:22 GMT
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோக்குடி கிராமத்தில் கீழப்பழுவூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோக்குடி ஏரியில் மண் அள்ளி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் அங்கு சென்று, பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் மண் கடத்தலில் ஈடுபட்ட அதே கிராமத்தை சேர்ந்த தாஸ் மகன் ஜெயப்பிரகாஷை(வயது 23) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய கொரத்தாக்குடியை சேர்ந்த சிவக்குமாரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்