புதுச்சத்திரம் அருகே கல்லூரி மாணவி கிணற்றில் தவறி விழுந்து சாவு
புதுச்சத்திரம் அருகே கல்லூரி மாணவி கிணற்றில் தவறி விழுந்து சாவு;
நாமக்கல்:
புதுச்சத்திரம் அருகே கல்லூரி மாணவி கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.
கல்லூரி மாணவி
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சிபுதூரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகள் கார்த்திகா (வயது 23). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு காரணமாக காரைக்குறிச்சி புதூருக்கு வந்த மாணவி கார்த்திகா நேற்று அவர்களுக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
சோகம்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுச்சத்திரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவி கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
======