திருச்சி மகளிர் சிறையில் 5 பேருக்கு கொரோனா தொற்று

திருச்சி மகளிர் சிறையில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

Update: 2021-06-07 20:41 GMT
திருச்சி
 மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,300 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் கைதிகளுக்கு கொரோனா பரவாமல் தடுப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதேபோல, சிறைக் காவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்தநிலையில் திருச்சி மத்திய சிறையில் சிறைக்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் சிறைக் காவலர் ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மகளிர் சிறையில் காவலர்கள் மற்றும் பணியாளர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்