தென்காசியில் 230 பேருக்கு கொரோனா பாதிப்பு

தென்காசி மாவட்டத்தில் 230 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

Update: 2021-06-07 20:35 GMT
தென்காசி, ஜூன்:
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 230 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 24 ஆயிரத்து 348 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 20 ஆயிரத்து 693 பேர் வீடு திரும்பி உள்ளனர். 3 ஆயிரத்து 268 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை 387 பேர் இறந்துள்ளனர்.

மேலும் செய்திகள்