தென்காசி போலீஸ் சூப்பிரண்டுக்கு பிரிவுபசார விழா

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பிரிவுபசார விழா நடந்தது.

Update: 2021-06-07 20:16 GMT
தென்காசி, ஜூன்:
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் மயிலாடுதுறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் பிரிவுபசார விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு, சுகுணா சிங்குக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்தார்.  விழாவில் தென்காசி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலிவரதன், தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்