2 சலூன் கடைகளுக்கு ‘சீல்’

அருப்புக்கோட்டையில் விதிமுறைகளை மீறிசெயல்பட்ட 2 சலூன் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2021-06-07 20:12 GMT
அருப்புக்கோட்டை, 
தமிழக அரசு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை நேற்று முதல் அறிவித்தது. இதில் காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட சில கடைகளை விதிமுறைகளுடன் திறக்க அனுமதி வழங்கியது. ஆனால் சலூன் கடைகள் திறக்க அனுமதி இல்லை. இந்தநிலையில் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் பிருதிவிராஜ் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது  பாவடி தோப்பு பகுதிகளில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 சலூன் கடைகளுக்கு அவர்கள் ‘சீல்’ வைத்தனர்.

மேலும் செய்திகள்