நெல்லையில் 202 பேருக்கு கொரோனா
நெல்லையில் 202 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
நெல்லை, ஜூன்:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45 ஆயிரத்து 287 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 41 ஆயிரத்து 257 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3 ஆயிரத்து 662 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மாவட்டத்தில் 386 பேர் இறந்துள்ளனர்.