விஷம் குடித்து விவசாயி தற்கொலை

நெல்லை அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-07 20:01 GMT
நெல்லை, ஜூன்:
நெல்லையை அடுத்த கீழச்செவலை சேர்ந்தவர் ராமையா (வயது 60). விவசாயி. இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட ராமையா நேற்று அந்த பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமையா பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்