சூதாட்டம் 12 பேர் கைது

துமகூருவில் சூதாட்டம் 12 பேர் கைது

Update: 2021-06-07 20:00 GMT
துமகூரு:

துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தாலுகா காட்டேனஹள்ளி கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் சிலர் காசு வைத்து சூதாடுவதாக கொரட்டகெரே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 12 பேர் காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். 

போலீசாரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினார்கள். ஆனாலும் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் தேவராஜ், சிவராஜ், சீனிவாஸ், நரசிம்மப்பா, நாராயணா, குமார், சஞ்சீவ்ராஜ், நாகராஜ், மஞ்சண்ணா, ரேணுகாமூர்த்தி, வாகித், கிருஷ்ணப்பா ஆகிய 12 பேர் என்பது தெரியவந்தது. 

இவர்களிடம் இருந்து ரூ.1.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்